Monday, September 11, 2017

70. A SORT OF COLLAGE ………






A SORT OF COLLAGE ………


Tablemate பற்றி அண்ணாச்சி நிறைய சொல்லிக்கிட்டே இருக்கார். மேல் வீட்டுக்காரர்ட்ட இருக்காம் … அடுத்த வீட்ல இருக்காம். அதோடு இது இருந்தா நல்லா காய் நறுக்கலாம் … சாப்பிடலாம் … ஆணி புடுங்கலாம்னு சொல்றார். ஆனால் அதில் படம் வரையலாம் என்று சொல்லவே இல்லை. 

ஆனால் என் மூத்த பேத்தி அதில் படம் வரைந்து முடித்து விட்டாள்.

சின்னாட்களுக்கு முன் சென்னை சென்றிருந்தேன். மூத்த பேத்தியின் tablemateன் ஓரத்தில் கீழே உள்ள படத்தில் உள்ள சின்னபடமும் இன்னும் அதன் பக்கத்தில் இரு படங்களும் இருந்தன. அந்தச் சின்னப் படத்தில் உள்ளதின் source எது என்று கேட்டேன். (இதற்கு முந்திய பதிவில் அவள் போட்டிருந்த படங்கள்  எதையும் பார்த்து வரைந்திருப்பாள் என்பது என் எண்ணம். அதனால் இந்தக் கேள்வியைக் கேட்டேன்). Madam எப்போதும் சுருக்கமாகத்தான் பதில் சொல்வார்கள்! இதற்கும் அதே போல் my design என்று பதில் வந்தது.

Very intricate design. It was a neat design too. 

பெரிய படத்தில் BTS என்றால் என்ன என்றேன். ஏதோ ஆங்கில பாடல் கோஷ்டியோ என்னவோ … அதைச் சொன்னாள்.

ஓரிரு நாட்களில் tablemate நிறைந்து விட்டது என்று மகளிடமிருந்து செய்தி வந்தது. படம் அனுப்பச் சொன்னேன். வந்தது. போட்டு விட்டேன்.

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.


” MY  DESIGN "


A FULL  TABLEMATE

Thursday, August 24, 2017

69. A SELFIE



This selfie reminds me a photo taken by me some 40 years back. It was my elder daughter's childhood photo - this grand daughter's பெரியம்மா ....



SELFIE ....

***

MY CLICK 40 YEARS BACK

Thursday, August 10, 2017

68. GRAND DAUGHTER'S RECENT DRAWINGS - CHARACTERS IN THE NOVEL SHE READ?













Tuesday, October 18, 2016

67. சின்ன artist .........






*



*



 U.K.G. படிக்கும் சின்ன பேத்தி எங்கள் பொறுப்பில் மூன்று நாட்கள் இருந்தாள். வரும்போதே crayons, sketch pens, one new drawing note என்று கனக்கச்சிதமாக வந்தாள். drawing note முடிந்து அதன் பின் கையில் கிடைக்கும் பேப்பரில் எல்லாம் படம் தான்.

அக்காளுக்கு நல்ல போட்டிதான்.












 கடைசிப்படம் அவளதுஅக்கா தனது முதல் வகுப்பில் படிக்கும் போது வரைந்த படம்.








NO  PLASTIC  BAG!


FLOWERS




அம்மா,  அக்காவுடன்




BIG  BOAT




SMALL  OCCUPIED  BOAT ON  WAVES





அம்மா,  அக்காவுடன்


******
அக்கா  வரைந்தது ....

Wednesday, August 24, 2016

66. DRAWINGS FROM HER FAVOURITE NOVELS




பேத்தியின் படங்கள் சில வந்தன.
Scribble art. Free sketching which I always like. Source தெரியவில்லை.

தொலைபேசியில் கேட்டேன்.  அவளுக்குப் பிடித்த நாவலில் வரும் பாத்திரங்களின் படங்கள் என்றாள். நாவலில் வரும் படங்களை பார்த்து வரைந்தது என்றாள்.

பிடித்த நாவல்:  PERCY  JACKSON

அவைகளில் சில இங்கே ....


















Monday, February 8, 2016

65. நானும் வரைந்து பார்த்தேன் ...


 எப்படியோ பேத்திகள் இருவருக்கும் அன்று வரையும் மூட். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பேத்திகள் மும்முரமாக வரைந்து கொண்டிருந்தார்கள். தரையெல்லாம் வண்ணக் கலவைகள் தான். பெரிய பேத்தி வரைந்து முடித்தாள்.

அவள் வரைந்த படம் ....




சின்ன பேத்தியும்  வரைந்து முடித்தாள்.

அடுத்ததாக அம்மாகாரி பிள்ளைகளை சிந்திய வண்ணங்களைத் துடைத்துச் சுத்தம் செய்யச் சொன்னாள்.

சிந்திய வண்ணங்களைப் பார்த்ததும் எனக்குள் இருந்த (?) கலைஞன் விழித்துக் கொண்டான். சிதறிக் கிடந்த வண்ணங்களும், தூரிகைகளும் வா ..வா  எனக் கூப்பிட்டன. விட்டேனா பார் என்று கசங்கிக் கிடந்த தாளில் நானும் வரைந்தேன்.

நான் "வரைந்த" படம் ....





படத்தை வரைந்ததும் பெரிய பேத்தியிடம் காண்பித்தேன். not bad என்பது மாதிரி தோளைக் குலுக்கினாள்.
 two out of ten? என்றேன்.
no..no.. eight out of ten என்றாள்.
எனக்கு சந்தோஷம் தாளவில்லை ...


கடைசியாக நால்வரும் சேர்ந்து தரையைச் சுத்தப்படுத்தினோம்!!



*

Friday, December 11, 2015

அக்காவுடன் தங்கையின் போட்டி






*



பெயின்ட், பிரஷ், க்ரேயான் எல்லாம் அக்காவுடன் சண்டை போடுவதற்கு ஏற்ற காரணங்கள் தங்கைக்கு.அவளுடன் போட்டி போட்டுக்கொண்டு ஏதாவது ‘வரைவது’ வழக்கம் தான்.

அவளின் அப்பா ஆரம்பித்திருக்கும் aquaponics farm-க்கு முதல் முறையாகப் போய்விட்டு வந்த அடுத்த நாள் ஏதோ வரைந்து கொண்டிருந்தாள். அதை அம்மாவிடம் கொடுத்து, fish in appa's farm என்று சொல்லியிருக்கிறாள். அம்மா அதை என்னிடம் அனுப்ப படம் எடுக்கும் போது, wait என்று சொல்லி சோகமாக இருந்த smiley-யை அழித்து சிரிப்பு smileyஆக மாற்றி படம் எடுக்கச் சொல்லியிருக்கிறாள்.






பரவாயில்லை. வயது 4 வருடமும் 50 நாட்களும். இந்த வயதில் அக்காவிற்கு நல்ல போட்டி தான் கொடுத்திருக்கிறாள்.

அக்கா தன் ஆறாவது வயதில் வரைந்த படத்தைப் பார்த்து ஆச்சரியமுற்று அவள் படங்களுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன். தங்கை இரண்டு வருடம் முந்தியிருக்கிறாள். எப்படி வருகிறாள் என்று காத்திருந்து பார்க்க வேண்டும். 


அக்கா அன்று  (ஏப்ரல், 2009) வரைந்த படம்.




 
template by suckmylolly.com flower brushes by gvalkyrie.deviantart.com