அவள் வரைந்த படம் ....
சின்ன பேத்தியும் வரைந்து முடித்தாள்.
அடுத்ததாக அம்மாகாரி பிள்ளைகளை சிந்திய வண்ணங்களைத் துடைத்துச் சுத்தம் செய்யச் சொன்னாள்.
சிந்திய வண்ணங்களைப் பார்த்ததும் எனக்குள் இருந்த (?) கலைஞன் விழித்துக் கொண்டான். சிதறிக் கிடந்த வண்ணங்களும், தூரிகைகளும் வா ..வா எனக் கூப்பிட்டன. விட்டேனா பார் என்று கசங்கிக் கிடந்த தாளில் நானும் வரைந்தேன்.
நான் "வரைந்த" படம் ....

படத்தை வரைந்ததும் பெரிய பேத்தியிடம் காண்பித்தேன். not bad என்பது மாதிரி தோளைக் குலுக்கினாள்.
two out of ten? என்றேன்.
no..no.. eight out of ten என்றாள்.
எனக்கு சந்தோஷம் தாளவில்லை ...
கடைசியாக நால்வரும் சேர்ந்து தரையைச் சுத்தப்படுத்தினோம்!!
*
No comments:
Post a Comment