A SORT OF COLLAGE ………
Tablemate பற்றி அண்ணாச்சி நிறைய சொல்லிக்கிட்டே இருக்கார். மேல் வீட்டுக்காரர்ட்ட இருக்காம் … அடுத்த வீட்ல இருக்காம். அதோடு இது இருந்தா நல்லா காய் நறுக்கலாம் … சாப்பிடலாம் … ஆணி புடுங்கலாம்னு சொல்றார். ஆனால் அதில் படம் வரையலாம் என்று சொல்லவே இல்லை.
ஆனால் என் மூத்த பேத்தி அதில் படம் வரைந்து முடித்து விட்டாள்.
சின்னாட்களுக்கு முன் சென்னை சென்றிருந்தேன். மூத்த பேத்தியின் tablemateன் ஓரத்தில் கீழே உள்ள படத்தில் உள்ள சின்னபடமும் இன்னும் அதன் பக்கத்தில் இரு படங்களும் இருந்தன. அந்தச் சின்னப் படத்தில் உள்ளதின் source எது என்று கேட்டேன். (இதற்கு முந்திய பதிவில் அவள் போட்டிருந்த படங்கள் எதையும் பார்த்து வரைந்திருப்பாள் என்பது என் எண்ணம். அதனால் இந்தக் கேள்வியைக் கேட்டேன்). Madam எப்போதும் சுருக்கமாகத்தான் பதில் சொல்வார்கள்! இதற்கும் அதே போல் my design என்று பதில் வந்தது.
Very intricate design. It was a neat design too.
பெரிய படத்தில் BTS என்றால் என்ன என்றேன். ஏதோ ஆங்கில பாடல் கோஷ்டியோ என்னவோ … அதைச் சொன்னாள்.
ஓரிரு நாட்களில் tablemate நிறைந்து விட்டது என்று மகளிடமிருந்து செய்தி வந்தது. படம் அனுப்பச் சொன்னேன். வந்தது. போட்டு விட்டேன்.
படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.
” MY DESIGN " |
A FULL TABLEMATE |