*
ஜெசிக்கா ஷ்ரேயா - என் பேத்தி. (நான் : தருமி) வயது 5. கையில் ஒரு காகிதம் கிடைத்துவிட்டால் உடனே 'படைப்பில்' ஆழ்ந்து விடுகிறாள். எப்போதும் கையில் ஒரு சின்ன soft toy; பென்குயின் பொம்மை; பெயரும் வைத்திருக்கிறாள் அதற்கு. Oreo. படம் வரைய கையில் ஏதாவது கிடைத்துவிட்டால் அந்தப் பென்குயினும் கூட மறந்து போய் விடுகிறது.
நான் ஒரு காலத்தில் வரைய மிக ஆசைப்பட்டேன்; பெரும் முயற்சிகளும் எடுத்து, தோல்வியே கண்டேன். 'சித்திரமும் கைப் பழக்கம்' என்பதைத் தவறென நிருபித்தது எனது தனிப் பெருமை. ஆனால், பேத்தி வரைய ஆரம்பித்ததும் மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. அதுவும் அவள் பென்சில்களைப் பிடிக்கும் முறையோ, free hand-ஆக கோடுகளை அனாயசமாக இழுக்கும்போதோ ஆச்சரியமாக இருந்தது. பேணி வளர்த்தால் நன்றாக வரைவாள் என்று தோன்றுகிறது.
'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்பதுபோல் அவளின் 'கிறுக்கல்கள்' எனக்கு ஓவியங்களாகப் படலாம்தான். இருந்தாலும், அவள் உள்ளே நான் இருப்பதாக நினைக்கும் திறமையைத் தட்டிக் கொடுத்து மேம்பட வைக்கவே இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கிறேன்.
Sunday, April 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நல்லதுங்க தருமி.
முதல்லே ஒருஃபோல்டரில் இந்தச் சித்திரங்களைப் பத்திரப்படுத்திவையுங்க. ஸ்கேன் செஞ்சு இங்கேயும் வலையில் போடுங்க.
மாடர்ண் ட்ராயிங் வகையில் இவைகள் வரும்.
மகளோட ஒரு 'பெயிண்டிங்'(??) அழகான ஃப்ரேமோடு கோபாலின் ஆஃபீஸில் அவர் அறையில் இருக்கு. Oil Spil in Southern Sea
ஆங்.... சொல்ல விட்டுப்போச்சே...தலைப்பு ஒன்னு கச்சிதமா வச்சிறணும்.
பேத்திக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
பேத்திக்கு முதல் வாழ்த்துக்கள் சொன்ன 'பாட்டி'க்கு மிக்க நன்றி.
அருமை அருமை தருமி - பேத்தி ஜெசிக்கா ஷ்ரேயாவிற்கு நல்வாழ்த்துகள்
நன்றி சீனா
பேத்தியின் திறமையினை ஊக்குவிக்கும் தாத்தா - வாழ்க தாத்தா ! வளர்க பேத்தி !
வாழ்த்துகள் ஜெசிகா, ஜெசிகாவின் தாத்தாவிற்கும்! :-)
செல்விஷங்கர்,
சந்தனமுல்லை
அன்புடன் நன்றி - பேத்தியின் சார்பாக.
Post a Comment