Wednesday, April 22, 2009
3. முதல் பிரமிப்பு
எப்போதும் கையிலே தூக்கித் திரியும் அவளது பென்குயினை - Oreo-வை - விருந்துக்கு சென்ற பெரியப்பா வீட்டில் தொலைத்து விட்டு வந்து விட்டாள். ஆனால், அதற்காக அதிகமாகக் கவலைப்படாதது போல் தோன்றியது. ஆனால் இரண்டு நாள் கழித்து, மேலே உள்ள படத்தை வரைந்து என்னிடமும், அவளது அம்மாவிடமும் காண்பித்து, ' I miss my Oreo so much' என்ற போது பாவமாக இருந்தது.
ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து அவளது Oreo கண்டுபிடிக்கப் பட்டு அவளிடமே வந்து சேர்ந்தது.
இரண்டு விஷயங்கள் எனக்குப் பிரமிப்பளித்தன. ஒன்று: எப்படி நினைவில் இருந்து அவளால் அவளது Oreo-வை வரைய முடிந்தது. என்னதான் கையிலேயே இரவும் பகலும் வைத்திருந்தாலும் இந்த வயதில் அதை மனக்கண் முன் கொண்டு வந்து எப்படி வரைய முடிந்தது என்பது.
இரண்டாவது: நானும் அவள் அம்மா இருவருமே Oreo-வின் இற்க்கைகளுக்கு நடுவில் என்ன வரைந்திருக்கிறாள் என்பது புரியாமல் முழித்தோம். Oreo வந்த பிறகு, அதனைப் பார்த்ததும்தான் புரிந்தது. அந்த பொம்மையில் அவள் வரைந்த டிசைனிலேயே அதன் கழுத்துப் பகுதிக்கு மட்டும் மஞ்சள் வண்ணத்தில் தனிப் பகுதி இருந்ததைப் பார்த்தோம். எங்களிருவருக்கும் ஆச்சரியம். நாம் இதுவ்ரை அதை அந்த அளவு உன்னிப்பாகப் பார்த்து நினைவில் கொள்ளாததை அவள் மனக்கண்ணில் கொண்டுவந்து வரைந்த்திருக்கிறாளே என்ற பிரமிப்பு ஏற்பட்ட போதுதான் இந்த வலைப்பூ ஒன்று ஆரம்பித்துவிட வேண்டுமென்ற எண்ணமே தோன்றியது.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அருமை.
அருமையோ அருமை!
மழலைகளின் அறிவுத்திறன் - நினைவாற்றல் - நம்மால் நினைத்துப் பர்ர்க்க முடியாது. நல்வாழ்த்துகள்
சின்னக் குழந்தையரின் சிந்தனைகள் நம்மை எங்கோ கொண்டு சென்று விடும். செல்லங்களின் செய்திகள் நம்மைச் சிந்திக்கவும் தூண்டும் !
ஜெஸிக்கா சார்பாக ...
குமரன்,
வால்ஸ்,
சீனா,
செல்விஷங்கர்
நன்றி
Post a Comment